இளமுருகமுத்து அவர்களின் தந்தை Dr. முத்து
அவரது கனவு அவரது லட்சியம் அனைத்தும், இந்த சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகவே இருந்தது.
தனது தந்தையின் கனவு லட்சியத்தை தனது லட்சியமாக ஆக்கிக் கொண்ட இளமுருகு முத்து அவர்கள்.
ஒரு தனி மனிதனோ, ஒரு சமுதாயமோ, முன்னேற வேண்டும் என்றால் *கல்வி* மட்டுமே இலக்கு ,என்பதை உணர்ந்தவர் இளமுருகமுத்து.
தனக்கு கிடைத்த கல்வி, தமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்த சமுதாய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் , என்ற சிந்தனையோடு
நமது சமுதாய மக்கள் 'அதிகாரத்தை' நோக்கி போக வேண்டும் என்றும்.தன் இலட்சியத்தையும் தந்தையின் கனவையும் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான். "டாக்டர் முத்துக் இலவச கல்விக் கழகம்' "
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தையும் , பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தையும். அம்பேத்கரின் கனவையும் நினைவாக்க, கல்வியை இலவசமாக கொடுத்து, கல்வி, கல்வி ஒன்றே சுயமரியாதையும், அதிகாரத்தையும் நம் சமூக மக்களுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் கொடுத்து, அதில் சாதனையும் புரிந்துள்ளார்.
இலவசமாக பல பயிற்சி வகுப்புகளை நடத்தி பல அரசு ஊழியர்களை உருவாக்கியுள்ளார்
தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத ஏழை மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சி மற்றும் பயிற்சியை வழங்குகிறது. இது 2019 இல் நிறுவப்பட்டது.